Tuesday, August 14, 2012

பெண்களுக்கான முதல் தொழில் நகரம் சவூதி அரேபியாவில் !!!

முஸ்லிம் நாடான சவுதி அரேபியாவில் ஷரியத் சட்டம் அமலில் உள்ளது. அதன்படி பெண்களுக்கு என சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதன்படி அவர்கள் வேலைக்கு செல்லக்கூடாது. அதனால் அங்கு 15 சதவீதம் பெண்களே பணிக்கு செல்கின்றனர். மற்றவர்கள் வீட்டில் பொழுதை வீணாக கழிக்கின்றனர். இதனால் அவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகிறது.

எனவே, பெண்களுக்காக தனியாக தொழில் நகரங்களை உருவாக்க சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. அங்கு தொழிற்சாலைகள் அமைத்து அவற்றை பெண்களே பணிபுரிந்து நிர்வகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான முதற்கட்ட பணிகள் சவுதி தொழிற் கட்டமைப்பு ஆணையம் (மாடன்) மூலம் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டில் பெண்களுக்கென்றே பிரத்யேகமான புதிய நகரம் உருவாகும் என மாடன் நிறுவனத்தின் துணை டைரக்டர் ஜெனரல் சலே அல்-ரஷீத் தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது,

பெண்கள் திறமையானவர்கள், அவர்களால் தொழிற்சாலைகளை சிறப்பாக நிர்வகித்து பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். அந்த திறன் அவர்களுக்கு இயற்கையிலேயே உள்ளது. சவுதி அரேபியாவில் இதுபோன்று பெண்களுக்கான தொழில் நகரங்கள் அதிக அளவில் உருவாக்கப்படும் என்றார். Thanks - Minnel


சந்தோஷமான திருமண வாழ்க்கை அமையணுமா?


ஒவ்வொருவருக்கும் திருமண வாழ்க்கை நன்கு சந்தோஷமாக அமைய வேண்டும் என்று ஆசை இருக்கும். அவ்வாறு ஆசை இருந்தால் மட்டும் போதாது. அதற்கு ஒரு சிலவற்றை பொறுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அனைவருமே திருமணத்திற்கு முன்பு சுதந்திரப் பறவையாக, எந்த ஒரு தடையும் இல்லாமல் எதையும் விருப்பப்படி செய்திருப்போம். ஆனால் அதுவே திருமணம் என்று வந்துவிட்டால், வாழ்க்கை சந்தோஷமாக இருக்க விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். மேலும் ஒவ்வொருவரும் தனக்கு வரவேண்டிய வாழ்க்கை துணை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது, தனக்கு வருபவருக்கும் அவர்களது விருப்பத்திற்கேற்ப நடந்து கொள்ளவும் வேண்டும். ஆகவே சந்தோஷமான வாழ்க்கை அமைய ஒருசிலவற்றை அனுபவசாலிகள் கூறுகின்றனர்…
திருமணத்திற்கு பிறகு தன் வாழ்க்கை துணையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அந்த புரிதல் இருவருக்குமே 50/50 என்று இருக்கக்கூடாது. அது உங்களிடம் இருந்து 70% பாசமும், அவர்களிடம் 30% பாசமும் வந்தாலே போதும் என்று நினைக்க வேண்டும். அதிலும் பெண்கள் தனக்கு வருபரிடம் அதிகமாக எதிர்பார்ப்பார்கள். ஆனால் ஆண்களால் அவை அனைத்தையும் வெளிப்படையாக காண்பிக்க முடியாது. ஆனால் உண்மையில் ஆண்களின் மனதில், தன் மனைவியின் மீது, சொல்லமுடியாத அளவு ஆசை, பாசத்தை வைத்திருப்பர். ஆகவே அதனை புரிந்து பெண்கள் அவர்களை சந்தோஷமாக வைத்தால், அவர்கள் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக அமையும்.
சந்தோஷமான வாழ்க்கையில் சமாதானம் மிகவும் முக்கியமான ஒன்று. அதில் யார் மிகவும் சிறந்தவர்கள் என்று கூறுங்கள் பார்க்கலாம்? வேறு யாராக இருக்க முடியும் ஆண்கள் தான். அவர்கள் தான், தனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், மனதை சமாதானப்படுத்திக் கொண்டு விரும்புவார்கள். உதாரணமாக, மனைவி என்ன தான் கேவலமாக சமைத்தாலும், கணவன் நன்றாக உள்ளது என்று கூறி அவர்களை சந்தோஷப்படுத்துவார்கள். தனக்கு பிடிக்காத படம் மனைவிக்குப் பிடித்தால், அதையும் பொறுத்துக் கொண்டு பார்ப்பது. முக்கியமாக மனைவி எதை சொன்னாலும், “சரி டார்லிங்” என்று சொல்வார்கள். இவையெல்லாம் நடந்தால், அந்த திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
என்ன தான் சண்டை நடந்தாலும் தன் துணையை தன் உயிரைப் போன்று நேசிக்க வேண்டும். அவ்வாறு நேசித்தால், எவ்வளவு வயதாகினாலும், அந்த பாசமும், அனபும் மாறாமல் இருக்கும். இப்போது கூட நிறைய இடங்களில் வயதானவர்கள், தங்கள் துணையின் மீது வைத்துள்ள அன்பிற்கு ஈடுஇணை எதுவும் இருக்காது. ஆகவே திருமணத்திற்குப் பின்னும் டேட்டிங் மற்றும் ஒரு நல்ல நட்புறவு என்பது இருவருக்கும் இடையில் இருக்க வேண்டும். இதுவே அனைவரின் மனதிலும் பெரிதும் இருக்கும் எதிர்பார்ப்பு.
ஆகவே இவ்ற்றையெல்லாம் சரியாக கடைபிடிக்க முடியும் என்று நினைத்தால், வாழ்க்கையானது வாழ்நாள் முழுவதும் மிகவும் சந்தோஷமாக இருக்கும். இல்லையென்றால் பிரச்சனை வீடு கட்டி தங்கிவிடும் என்றும் கூறுகின்றனர். Thanks - Winyarl

Saturday, August 4, 2012

சிக்கன் பிரியாணி






தேவைப்படும் பொருட்கள்

பாஸ்மதி அல்லது சீரகசம்பாஅரை கிலோ
இஞ்சி பூண்டு விழுது-4 ஸ்பூன் சிக்கன் - அரைகிலோ
வெங்காயம்-3
தக்காளி-5
பச்சை மிளகாய்-3
பிரியாணி பொடி-50 கிராம்
தயிர்-ஒரு கப்
கொத்தமல்லி-அரை கப்
புதினா-அரைகப்
உப்பு-தேவைக்கு
எலுமிச்சை சாறு-3
ஆரஞ்ச் கலர்- சிறிதளவு
நெய்- 3 குழிகரண்டி
செய்முறை:-
சிக்கனை சுத்தம் செய்து தயிர் மற்றும் உப்பு சேர்த்து அரை மணி நேரம்ஊறவிடவும்.
வெங்காயம் நீளவாக்கில் நறுக்கவும்தக்காளியை நான்காக நறுக்கவும்.பச்சைமிளகாயின் காம்பு மட்டும் நீக்கவும்எலுமிச்சை சாறு எடுத்து தயாராகவைக்கவும்புதினா கொத்தமல்லி நறுக்கி வைக்கவும்.
அரிசியை உப்பு சேர்த்து அரைவேக்காடாக வடித்து வைக்கவும்பின் தனியாக ஒருதட்டில் பரப்பி வைக்கவும்இவ்வாறு செய்தால் இன்னும் ஒட்டாமல் உதிரியாகவரும்.
நெய்யில் பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரைவதக்கவும்.
வெங்காயத்தின் நிறம் மாறியதும் கொத்தமல்லி,புதினா சேர்த்து வதக்கவும்.சுருங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு வாசனை போனதும் தக்காளியை சேர்த்து உடைக்காமல் கிளறவும்.
பின்னர் பிரியாணி பொடி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கிளறவும்.
பின்னர் ஊற வைத்த சிக்கனை சேர்த்து முக்கால் பதம் வேகும் வரை மிதமானதீயிலேயே வேகவிடவும்இறைச்சி விடும் நீரே போதுமானது. தேவைப்பட்டால்மட்டுமே நீர் சேர்க்கவும்.
சிக்கன் முக்கால் பாகம் வெந்ததும் எலுமிச்சை சாறு கலந்து 2 நிமிடம் கிளறிவிட்டும் பின் தனியாக எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சாதம் சிறிதளவு கொட்டவும். அதற்கு மேல் சிக்கன் கிரேவியைசிறிதளவு சேர்க்கவும்கொத்தமல்லி புதினா தூவவும்.இப்படியாக சாதம் முடியும்வரை அடுக்கடுக்காக செய்யவும்.
கடைசியாக மேலே சாதம் வரும்படி லேயர் உருவாக்கி சாதத்தின் மேல் ஆரஞ்ச்பொடி கலந்த நீரை ஆங்காங்கே ஊற்றவும்அல்லது வட்ட வடிவில் ஊற்றவும்.பின் இதனை 5 நிமிடம் தம்மில் வைக்கவும்.

இறக்கும் போது நன்கு மூடியிட்டு ஒரு முறை மேலே உள்ள சாதம் கீழிறங்கும்படியாக குலுக்கவும்அவ்வளவு தான் லேயர் சிக்கன் பிரியாணி தயார்.எள்கத்திரிக்காய் கிரேவிவெங்காய ரைத்தா உடன் பரிமாறவும்.
கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்:-
  • கடைகளில் விற்கும் பிரியாணி பொடி உபயோகிக்கலாம்இல்லையேல்பட்டை,ஏலக்காய்,கிராம்பு,etc முதலிய வாசனை பொருட்களை பொடிசெய்து அத்துடன் மிளகாய் தூளும் சேர்த்து வதக்க வேண்டும்.
  • அவ்வாறு வீட்டிலேயே பொடி செய்வதாய் இருந்தால் நேர்பட்டையைஉபயோகிக்கவும்.சுருள் பட்டையை விட நேர்பட்டை வாசம்கொடுக்கும்.
  • பட்டையை லேசாக ஓரத்தில் கடித்தால் இனிப்பு சுவையுடன் சட்டெனகாரத்தன்மை கொடுத்தால் அது தான் தரமான பட்டை வகை.அப்படியுள்ளதை தேர்ந்தெடுக்கவும்.
  • அடிக்கடி கரண்டி உபயோகிக்க வேண்டாம்சாதம் உடைந்துவிடக்கூடும்.
  • நாட்டு தக்காளி நல்ல புளிப்பு சுவை கொடுக்கும்கிடைக்கவில்லைஎன்றால் பெங்க்ளூர் தக்காளி 1 அல்லது 2 அதிகமாக சேர்க்கவும்.
  • பச்சை மிளகாயை நறுக்க தேவையில்லைகாம்பு மட்டும் நீக்கவும்.அதுவே போதுமான காரம் கொடுத்துவிடும்.
  • நெய் அதிகம் சேர்க்க விருப்பம் இல்லை என்றால்குறைத்துக்கொள்ளலாம்அல்லது பாதி ரீபைண்ட் ஆயில் சேர்க்கலாம்.டால்டா சேர்க்க வேண்டாம்.
  • எலுமிச்சையை அதிகமாக பிழிய கூடாதுலேசாக சாறு வரும்வரைமட்டும் பிழியவும். ஏனென்றால் கசப்பை ஏற்படுத்தும்.
  • வெறும் கொத்தமல்லி இலைபுதினா இலை மட்டும் எடுக்காமல்தண்டும் சேர்க்கவும். அதாவது கொத்தமல்லி (வேரை தவிர),புதினா(கடினமான தண்டு தவிரகடைசி வரை ஆய்ந்து உபயோகிக்கவும்.தண்டும் வாசனை கொடுக்கும் என்பதால்.

தம் போடும் முறை:-
தீயை சிம்மில் வைத்துஅதன் மேலே தோசைகல்லை வைத்துஅதன் மேலேபிரியாணி பாத்திரத்தை வைத்து மூடியிட்டுமூடியின் மேல் தண்ணீர் உள்ளபாத்திரத்தை வைக்க வேண்டும்.இப்படி தான் தம் போடணும்சரியா 5 லிருந்து 10 நிமிடம் வரை சிறுதீயில்இருக்கணும் (அல்லது பாத்திரத்தில் நீர் வற்றியதும் சிர்சிர்ன்னு மெல்லிய சவுண்ட்கேக்கும்அப்ப அடுப்ப அணைச்சுடுங்க). இறக்கியதும் மூடியை திறக்காமல் 10நிமிடம் கழித்து அல்லது பரிமாறும் போது திறங்க.   Thanks Nallvanda...