Sunday, September 30, 2012

வாய் நாற்றத்தை இயற்கையாலேயே தடுக்கலாமே!!


நல்ல சுவையான உணவுகளை உண்ட பின்வாயிலிருந்து வரும் நாற்றத்தை தாங்கவே முடியாது. ஏனெனில் அதில் பூண்டுவெங்காயம் போன்றவற்றை அதிகம் சேர்ப்பதால் நாற்றம் ஏற்படுகிறது.


ஆகவே நிறைய பேர் சாப்பிட்ட பின்வாய் நாற்றத்தைப் போக்க கடைகளில் விற்கும் நறுமணமிக்க பாக்குகளைஏதேனும் சுயிங் கம்களை வாங்கி மென்று கொண்டு இருப்பார்கள். ஆகவே அவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு கடைகளில் விற்கும் வாய் நாற்றத்தைப் போக்கும் பொருட்களை வாங்குவதை விடவீட்டில் இருக்கும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் ஒரு சில பொருட்களை மெல்லலாமே!!!

*ஏலக்காய்: உணவு உண்ட பின்பாக்குகளை போடாமல் அப்போது சமையலறையில் இருக்கும் ஏலக்காயை வாயில் போட்டு 20 நிமிடம் மென்றால்,துர்நாற்றம் இல்லாமல் இருக்கும்.

* கொத்தமல்லி: கொத்தமல்லியை சாப்பிட்டால் வாய் நாற்றம் போகும் என்பது நம்ப முடியாது தான். ஆனால் உண்மையில் கொத்தமல்லியை உணவுக்கு பின் சாப்பிட்டால் வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.

* கிராம்பு/லவங்கம்: உணவில் காரம் மற்றும் மணத்திற்கு பயன்படும் பொருளான கிராம்பு மற்றும் லவங்கம்வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் கிராம்பை சாப்பிட்டால்சளி மற்றும் இருமல் சரியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய சிறப்பான கிராம்பு துர்நாற்றத்தை மட்டும் நீக்காமல்,தொண்டை கரகரப்பையும் சரிசெய்யும்.

* புதினா: நிறைய உணவில் மேலே அலங்கரிக்க புதினாவை எதற்கு பயன்படுத்துகிறோம் என்று தெரியுமாஏனெனில் அதனால் உணவு நன்கு கலராக இருப்பதோடுவாய் துர்நாற்றத்தையும் தடுக்கும் என்பதால் தான்.

* கொய்யாப்பழம்: பழங்களில் ஒன்றான கொய்யாவாய் துர்நாற்றதை நீக்கப் பயன்படுகிறது. ஆகவே வாய் நாற்றம் அடிக்கும் போதுஆரோக்கியமற்ற பொருட்களை உண்பதை தவிர்த்துஇந்த கொய்யாப்பழத்தை சாப்பிட்டால்உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு,வாய் துர்நாற்றமும் நீங்கும்.

* மாதுளை: அனைவருக்கும் மாதுளையின் நன்மைகள் தெரியும். இத்தகைய மாதுளை ஆரோக்கியமான இதயம் மற்றும் பளபளப்பான சருமத்தை தருவதோடுஇதன் விதையை சாப்பிட்டால்வாயில் நாற்றம் ஏற்படாமல் தடுக்கலாம். ஆகவே இனிமேல் கடைக்கு செல்லும் போதுஇந்த பழத்தை வாங்கும் பழக்கத்தை வைத்துக் கொண்டால்வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.

ஆகவே மேற்கூறிய பொருட்களை சாப்பிட்டால்எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல் இருப்பதோடுஉடல் ஆரோக்கியமாகவும்,வாய் துர்நாற்றம் இல்லாமலும் இருக்கும்.

Monday, September 17, 2012

உங்களை பாதுகாத்துக்கொள்ள உப்பை ஒதுக்குங்கள் !

லண்டன்: புற்றுநோய் பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாப்பது எப்படி? என்பது குறித்த விளக்கங்களை இங்கிலாந்து சேரிட்டி மற்றும் டபிள் யூ.சி.ஆர்.இ. ஆகிய அமைப்புகள் வெளியிட்டுள்ளன. 

அதில் உணவுகளில் உப்பை குறைத்து சாப்பிடுவதே அதற்கு சிறந்த மருந்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அதிக உப்பு சேர்ப்பதன் மூலம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. 

இதன்மூலம் இருதய நோய்கள், பக்கவாதம் போன்றவை ஏற்படுகிறது. அதனுடன் வயிற்றில் புற்றுநோய் உருவாகவும் இது வழிவகை செய்கிறது. மக்கள் நாள் ஒன்றுக்கு தங்கள் உணவில் 8.6 கிராம் உப்பு சேர்க்கின்றனர். இது அதிக அளவாகும். அதை 6 கிராம் ஆக குறைக்க வேண்டும் என உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியகம் தெரிவித்துள்ளது. 

எனவே பொதுமக்கள் தங்கள் உணவு வகைகள் மற்றும் ரொட்டி போன்றவற்றில் குறைந்த அளவு உப்பு சேர்த்து அதன் மூலம் புற்றுநோயில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Sunday, September 16, 2012

கணிபொறி மற்றும் ஸ்மார்ட் போன்களை விற்பதற்கு முன் செய்ய வேண்டிய முக்கியமான 4 செயல்கள் !!!

உங்களுடைய கணினியை நீங்கள் மற்றவர்க்கு விற்கும் பொழுது செய்ய வேண்டிய முக்கியமான 4 செயல்களை பற்றி பார்போம். அதற்கு முன்னர் ஏன் செய்ய வேண்டும் என்பதை சொல்லி விடுகிறேன்.

உங்களுடைய கணினியில் உங்களுடைய பல சொந்த தங்கவல்கள் பதிந்து வைத்திருப்பீர்கள், உங்களுடைய account password கூட பதிந்து வைத்திருக்கலாம், இது போன்ற நிறைய உங்கள் சொந்த தகவல்கள் அதில் இருக்கலாம் அதனால் முக்கியமாக இதை செய்யுங்கள்.

Backup
நீங்கள் கேட்கலாம் நாங்கள் விற்கும் பொழுது Backup எடுத்து விட்டு தானே விற்க போறோம் என்று, நீங்கள் உங்களுடைய தகவல் களை மட்டும் Backup செய்வீர்கள், அதற்கு பதிலாக உங்களுடைய முழு disk கையும் image Backup எடுத்துகொல்லுங்கள். இது உங்களுடைய புக்மார்க் மற்றும் சில சாப்ட்வேர் செட்டிங்க்ஸ் களை செய்வதற்கு உதவும்.

Secure Format:
உங்களுடைய கணிணியை பார்மட் செய்து விடுங்கள், நீங்கள் உங்களுடைய தகவல்களை அழித்திருந்தாலும் அவற்றை Recovery Software மூலம் எடுத்து விட முடியும் அதனால் உங்களுடைய கணிணியை Format செய்து விடுங்கள்.

De-authorise
உங்களுடைய Smart phone மற்றும் computer ரை ஒரு சில அக்கௌன்ட் உடன் இனைதிருபீர்கள், அதை  De-authorise செய்து விடுங்கள், ஏன் எனில் அவற்றின் மூலம் உங்கள் அக்கௌன்ட் குள் செல்ல வழி உள்ளது.

Saved Password in Smart Phone:
ஸ்மார்ட் போன் களில் உள்ள பதிந்து வைத்துள்ள அணைத்து தகவல்களையும் மறக்காமல் அழித்துவிடுங்கள், ஸ்மார்ட் போன் களில் உள்ள தகவலகலையும் Backup செய்துகொள்ளுங்கள். முக்கியமாக personal video களை அளித்து விடவும். 

Monday, September 10, 2012

காய்கறி கட்லட் ...


உடல் ஆரோக்கியமாக இருக்க காய்கறிகளை தினமும் நன்கு சாப்பிட வேண்டும். ஏனெனில் அவற்றில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. ஆகவே அவற்றை எப்போதும் ஒரே விதமாக குழம்பு, பொரியல் என்று செய்து சாப்பிடாமல், சற்று வித்தியாசமாக கட்லட் செய்து சாப்பிடலாம். இப்போது அந்த காய்கறி கட்லட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
( உருளைக்கிழங்கு – 2 ) ( கேரட் – 2 ) ( தக்காளி – 1 ) ( வெங்காயம் – 1 ) ( கார்ன் பவுடர் – 1 கரண்டி ) ( கொத்தமல்லி – 1/2 கட்டு ) ( மிளகாய் தூள் – 2 கரண்டி ) ( இஞ்சி பூண்டு விழுது – 1/2 கரண்டி ) ( கரம் மசாலா தூள் – 1 கரண்டி ) ( உப்பு – தேவையான அளவு ) ( எண்ணெய் – தேவையான அளவு )
செய்முறை:
முதலில் வெங்காயத்தை நறுக்கி மிக்ஸியில் லேசாக அடித்துக் கொண்டு, பின் தக்காளி மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டை நன்கு மசித்துக் கொள்ளவும். பின் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை அதில் போடவும்.
பின்னர் அதில் லேசாக அடித்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, , கரம் மசாலா தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு அதனை சிறு உருண்டைகளாக எடுத்துக் கொண்டு, சற்று தட்டையாக தட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் சற்று அதிகமாக எண்ணெய் ஊற்றி, அந்த தட்டி வைத்துள்ள கலவையை முன்னும் பின்னும் பொன்னிறமாக மொறுமொறுவென வேக வைத்து எடுக்கவும். இப்போது சுவையான காய்கறி கட்லட் ரெடி!!!

Thursday, September 6, 2012

பிளேன் ஏறி வந்து பிச்சை எடுத்த இந்திய பிச்சைகாரர்கள் துபாயில் கைது!


துபாயில் பிச்சை எடுப்பது குற்றம்! ரமலான் நோன்பின்போது யார் என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாது இருப்பதைக்கொடுக்க வேண்டும் என்பது இஸ்லாமியர் நியதி. இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு இந்தியாவிலிருந்து விமானத்தில் வந்து பிச்சை எடுத்த இந்தியர்கள் 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இவர்கள் தமிழ்நாடு, பீகார், உத்தர பிரதேசம் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 16 தமிழர்களும் அடக்கம்! (ராமநாதபுரம், வேலூர், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்)
இதேபோல் ஷார்ஜாவில் வீட்டில் பிச்சை கேட்ட 40 வயதான ஒரு பாகிஸ்தானியரை கைது செய்து அவரின் பையில் சோதனை செய்தபோது பையில் இருந்தது எவ்வளவு தெரியுமா? Dhs 30,000 (இந்திய மதிப்பில் 4.5 லட்சம்!)
இந்த பிச்சைக்காரர்கள் ரமலான் மாதத்தை ஒரு வியாபாரமாகவே கருதுகின்றனர். ரமலான் மாதத் தொடக்கத்தில் Visit Visa வாங்கி விமானம் ஏறி துபாய், கத்தார், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளுக்குச் சென்று தொழிலை ஆரம்பித்துவிடுவர். இதற்கு மொத்தமாய் ஆகும் செலவு 50,000 ரூபாய். ஒரு மாதம் ரமலான் நோன்பு முடிந்ததும் தங்கள் தொழிலை முடித்துவிட்டு சொந்த நாட்டிற்கு திரும்பிவிடுவர். இது எப்படி இருக்கு?
துபாயில் ஊடக செய்தி நிறுவன இளைஞர் ஒருவர் சில நாட்கள் முன்பு ரோட்டில் நின்று உதவி/பிச்சை கேட்டதில் பத்தே நிமிடத்தில் கிடைத்தது எவ்வளவு தெரியுமா? 1,200 Dhs (ரூ.18,000) இதை பெருமையாக? அவரே கூறியுள்ளார்.
சரி இவர்களைப் போட்டுக்கொடுத்தது யாராக இருக்கும்? நிச்சயம் இன்னொரு இந்தியராககூட இருக்கலாம்! என்னைவிட அதிகம் சம்பாரிக்கிறான் என்ற பொறாமையால் துபாயில் பணி புரிந்துகொண்டிருக்கும் இன்னொரு இந்தியரேகூட போட்டுக்கொடுத்திருக்கலாம்  கைது செய்யப்பட்டுள்ளவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள், இவர்களுக்கு 3 மாதம்வரை சிறை தண்டனை கிடைக்கலாம்!

Wednesday, September 5, 2012

முதுகு வலியில் இருந்து தப்பிக்க ஒரு நல்ல பயிற்சி ...


முதுகு வலியில் இருந்து தப்பிக்க ஒரு நல்ல பயிற்சி

இந்த காலத்தில் முதுகு வலியில்லாதவர்களே இல்லை என்று கூறமுடியாத அளவிற்கு எல்லோருக்கும் முதுகுவலி இருக்கிறதுஅதை தவிர்க்க இந்த உடற்பயிற்சி மிக உபயோகமாக இருக்கிறதுஇதை தொடர்ந்து செய்தால் வலியைதவிர்க்கலாம்.

Saturday, September 1, 2012

இணைய வலையிலிருந்து சிறுவர்களை பாதுகாத்திட !


இளம் மாணவர்களுக்கு அரசு லேப்டாப் கம்ப்யூட்டர்களை வழங்குகிறது. அரசு தரும் கம்ப்யூட்டரில் இணைய இணைப்பு வசதி இலவசமாக இல்லை என்றாலும், நிச்சயம் பெற்றோர்கள் அவற்றை வாங்கிக் கொடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

இன்றைய உலகில் கற்றுக் கொள்வதற்கும் அறிவுத் தேடலுக்கும் முதல் தேவை இணைய இணைப்பும், இணையத் தேடலும் தான்.

இதில் அபாயம் தரும் இன்னொரு பக்கமும் உள்ளது. முற்றிலும் கட்டற்ற இணையம் சிறுவர்களுக்கு அபாயகரமானது. பாலியல் தளங்களும், வன்முறையை போதிக்கும் தளங்களும் இணையத்தில் நிறைந்து கிடக்கின்றன.

இவற்றைப் பார்க்காதே என்று ஒரு காவலாளி போல சிறுவர்களை எந்நேரமும் கட்டுப்படுத்துவது இயலாது. மேலும் வரையறைகளை அமைப்பது இன்றைய டிஜிட்டல் உலகில் பெற்றோர்களுக்கும் சற்று சிரமமான செயல்பாடாக உள்ளது. இயலாததும் கூட. பெற்றோர் தடை இடுகையில் அதனை மீற வேண்டும் என்ற இயல்பு சிறுவர்களுக்கு இயல்பாகவே தோன்றுவது இயற்கையே.

இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க நமக்கு K9 Web Protection என்னும் புரோகிராம் நமக்கு உதவுகிறது. இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் இந்த புரோகிராம், வீடுகளில் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களில், இணையத்தில் பெற்றோர் கட்டுப்படு விதிக்க உதவுகிறது. உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள இணையத்தை உங்கள் கட்டுப்பாட்டிலேயே, நீங்கள் அருகில் இல்லாத சூழ்நிலையிலும், வைத்திருக்க உதவுகிறது.

உங்கள் குழந்தைகளை இணையம் தரும் தீமைகளிலிருந்து பாதுகாக்க உதவிடும் இதன் சிறப்பம்சங்களாவன:

பாலியல், போதை மருந்து, தனிநபர் டேட்டிங், வன்முறையைப் போதிப்பது, வெறுப்பினை வளர்ப்பது, இனவேறு பாட்டினைத் தூண்டுவது என 70க்கும் மேற்பட்ட பல்வேறு பிரிவுகளாக, இணைய தளங்களைப் பிரித்து வைத்து தடுக்கலாம்.

குழந்தைகளின் வயதின் அடிப்படையில், தடுப்பு நிலைகளை அமைக்கலாம். அனைத்து தேடல் சாதனங்களிலும், SafeSearch என்ற ஒன்றை இயக்கி வைக்கலாம். குறிப்பிட்ட நேரத்தில் இணையத் தொடர்பினை ஏற்படுத்த இயலாமல் செட் செய்திடலாம்.

"எப்போதும் அனுமதி' மற்றும் "எப்போதும் தடை செய்திடு' என இருவகைகளாக இணைய தளங்களைப் பிரித்து அமைக்கலாம். பெற்றோர் அமைத்திடும் பாஸ்வேர்ட் மற்ற பாஸ்வேர்ட்களையும் மீறி இருக்கும் வகையில் அமைக்கலாம்.

கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் சற்று அதிகம் தெரிந்து பயன்படுத்துபவர்கள் கூட, மீட்டெடுக்க முடியாத தடைகளை உருவாக்கலாம். தடை செய்யப்பட்ட தளங்களைப் பார்த்தால், அது குறித்த அறிக்கை தரும்படி அமைத்திடலாம். விண்டோஸ் மட்டுமின்றி, மேக் கம்ப்யூட்டர்களில் இயங்கும் வகையிலும் இது தரப்படுகிறது.

K9 Web Protection என்ற இந்த புரோகிராம், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் எக்ஸ்பி, மேக் ஓ.எஸ். எக்ஸ் 10.4.7 மற்றும் அதற்கும் மேற்பட்ட சிஸ்டங்களில் இயங்குகிறது.

இதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திட முயற்சிக்கையில் லைசன்ஸ் கீ தரும்படி இந்த புரோகிராம் கேட்கும்.

லைசன்ஸ் கீயினை இலவசமாக,http://www1.k9webprotection.com/getk9webprotectionfree என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் பெற்றுக் கொண்டு பயன்படுத்தலாம்.