சென்னை மாநகரம் தோற்றுவித்து 373 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு 'நம்ம மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்' என்ற பெயரில் சென்னையில் ஒரு வாரம் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இதுகுறித்து 'நம்ம மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்' குழு ஒருங்கிணைப்பாளர்கள் முத்தையா, ஸ்ரீராம், சுசீலா ரவீந்திரநாத், பத்மா சுவாமிநாதன் ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மெட்ராஸ் நகரம் 1639ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி கிழக்கு இந்திய நிறுவனத்தால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த 373 ஆண்டுகளில் சென்னை பல்வேறு வளர்ச்சி கண்டுள்ளது. சென்னையில்தான் நாட்டின் முதல் மருத்துவமனை தொடங்கப்பட்டது. முதல் ஆவண காப்பகம் சென்னையில் உள்ளது. பல சிறப்புகளை கொண்ட சென்னையை போற்றும் வகையிலும், மற்றவர்கள் தெரிந்துக் கொள்ளும் வகையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு 'மெட்ராஸ் தினம்' கொண்டாட ஆரம்பித்தோம். பலருடைய ஆதரவு காரணமாக இப்போது 'நம்ம மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்' என்ற பெயரில் 'மெட்ராஸ் வாரம்' கொண்டாட உள்ளோம். வரும் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் சென்னை குறித்த சொற்பொழிவுகள், நாணயம், புகைப்படம், அஞ்சல் தலை கண்காட்சிகள், பேச்சு, கட்டுரை, புகைப்படம், குறும்பட போட்டிகள், சுற்றுலா, சிற்றுலா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நிகழ்ச்சி நடத்த விரும்புபவர்கள் 2841 1495 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் மெட்ராஸ் வார நிகழ்ச்சிகளை www.themadarasday.in
என்ற இணையதளத்தில் பார்க்கலாம். Thanks Kumari News.
No comments:
Post a Comment