சிறையில் உள்ள கணவனிடம் இருந்து கடத்தி வரப்பட்ட உயிரணுக்கள் மூலம் செயற்கை முறையில் கருவுற்ற மனைவி ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
பாலஸ்தீனத்தை சேர்ந்த அமர் அல்ஜாப் என்பவரை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவருக்கு மனைவி, மகள் உள்ளனர்.
ஒரு ஆண் குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அமருடைய மனைவி தலால் ரபயாவுக்கு ஆசை. இந்நிலையில், சிறையில் உள்ள கணவனின் உயிரணுக்களை கடத்தி கொண்டு வந்துள்ளனர்.
அதன் மூலம், தலாலுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் நடந்தது. பாலஸ்தீனத்தில் உள்ள வெஸ்ட் பேங்க் நகரில் உள்ள மருத்துவமனையில் தலாலுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
மனைவி கருவுறுவதற்காக சிறையில் உள்ள அமரிடம் இருந்து 3 முறை உயிரணுக்கள் கடத்தி வரப்பட்டுள்ளது. இப்போது ஆபரேஷன் மூலம் தலாலுக்கு குழந்தை பிறந்தது.
அதுவும் அவர் ஆசைப்பட்டபடியே ஆண் குழந்தை பிறந்துள்ளது.