Saturday, August 18, 2012

சிக்கன் வெஜ் புலாவ் ...


  • சிக்கன் வெஜ் புலாவ்

    பாசுமதி அரிசி- 400கிராம்
  • சிக்கன் - கால் கிலோ
  • காய்கறி - கால் கிலோ
  • ( கேரட்,பீன்ஸ்,உருளைக்கிழங்கு)
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3டீஸ்பூன்
  • கரம் மசாலா - அரைடீஸ்பூன்
  • வெங்காயம் - 100கிராம்
  • தக்காளி - 200 கிராம்
  • பச்சை மிளகாய் - 3
  • மல்லி,புதினா - தலா 2 டேபிள்ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் - 1டீஸ்பூன்
  • மல்லித்தூள் - 1டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
  • எண்ணெய் நெய் - தலா 50 மில்லி
  • விரும்பும் கலர் - பின்ச்
  • உப்பு - தேவைக்கு.

  • அரிசியை நன்கு அலசி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.சிக்கனை சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் வடிகட்டவும்.வெங்காயம்,தக்காளி,மல்லி,புதினா காய்கறிகளை நறுக்கி வைக்கவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் நெய் விடவும்,நறுக்கிய வெங்காயம் வதக்கவும்,சிவறவும்,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.சிறிது வதங்க விடவும்.
  • பின்பு நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்க்கவும்.மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,மல்லித்தூள் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.அத்துடன் சிக்கன் சேர்த்து பிரட்டி விடவும். நறுக்கிய காய்கறிகள் சேர்க்கவும்.சிறிது மூடி போட்டு வேக விடவும்.மல்லி புதினா,பச்சை மிளகாய் சேர்க்கவும்.
  • அத்துடன் ஊறவைத்த அரிசியை சேர்த்து உடையாதவாறு ஒரு பிரட்டு பிரட்டி அரிசியின் அளவிற்கு இரண்டு மடங்கு கொதி நீர் சேர்க்கவும்.உப்பு சரி பார்க்கவும்.
  • எல்லாம் சேர்ந்து கொதிவரவும் மூடி போட்டு மீடியம் நெருப்பில் வேக விடவும்.சாதம் வெந்து தண்ணீர் வற்றி வரும் பொழுது விரும்பினால் பின்ச் கலர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
  • தீயை மிகவும் குறைத்து 10 நிமிடம் மூடி வைத்து புலாவ் ரெடியானவுடன் அடுப்பை அணைக்கவும்.
  • கால் மணி நேரம் கழித்து சாதம் உடையாதவாறு பிரட்டி எடுத்து பரிமாறவும்.
  • சுவையான சிக்கன் வெஜ் புலாவ் ரெடி.ஆனியன் ரைத்தா அவித்த முட்டையுடன் பரிமாறவும். Thanks -  ஆசியா உமர்.